வீடியோ விளையாட்டால் பரிதாபமாகப் பலியான சிறுவன் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

வீடியோ விளையாட்டால் பரிதாபமாகப் பலியான சிறுவன்


இந்தியாவின் கோவை மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயதான   சிறுவன் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமையால்,  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த வந்த குறித்த சிறுவன், வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையானதன் காரணமாகவே, தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்தநேரமும் குறித்த சிறுவன், கைத்தொலைபேசியில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடிய வண்ணமே இருந்துள்ளார். இதனை அடுத்து குறித்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை கண்டித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த குறித்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதி காவல்துறையினர் சிறுவனின் உடலத்தை மீட்டதுடன், சம்பவம் குறித்த விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன