பலத்த இடி மின்னல் மழை காரணமாக மின் மானிகள் எரிந்து நாசம் ! கல்முனையில் சம்பவம்..! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பலத்த இடி மின்னல் மழை காரணமாக மின் மானிகள் எரிந்து நாசம் ! கல்முனையில் சம்பவம்..!கல்முனை பகுதியில் நேற்று (30)
மாலை வேளையில் சில மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய இடைவிடாமல் மழை பெய்தது.

இதன் காரணமாக கல்முனை
கிரீன்ஃபீல்ட் மக்கள் குடியிருப்பில் 27 ஆம் இலக்க தொடர்  மாடியில்   பொருத்தப்பட்டிருந்த மின்மானிகள் திடீரென  
தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகி உள்ளது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 

நேற்று மாலை பெய்த
பலத்த இடி மின்னல் காரணமாக
நீர் கசிவுஏற்ப்பட்டு மின்மானி தீ பரவல் இடம்பெற்று இருக்கலாம் என தெரிய வருகிறது .


இதனால் இங்கு பொருத்தப்பட்டிருந்த 12 மின்மானிகள் தீயினால் முற்றாக சேதமடைந்ததுடன் பின்னர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்த மின்சார சபையினர் மின் செல்லும் இணைப்பை துண்டித்து மின் பரவலை கட்டுப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீரின் மூலம் தீயை கட்டுப்படுத்தினர்.

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தகத்து