யோஷிதவை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிபதி யாருடன் தொலைபேசியில் பேசினார்? - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யோஷிதவை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிபதி யாருடன் தொலைபேசியில் பேசினார்?


முன்னாள் கடுவெல நீதிவான் தம்மிக்க ஹேமபாலவினால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒன்று குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொலிசாரிற்கு உத்தரவிட்டுள்ளது அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணக்குழு.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வன் யோஷித ராஜபக்ச மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்என் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்தபோது நிதி மோசடி மேற்கொண்டது, அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, 2016ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்போது, கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் யோஷித முற்படுத்தப்பட்டார்.

தன்னை முற்படுத்திய பின்னர், நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டை வாசித்தபோது, நீதிபதியின் உத்தியோகபூர்வ தொலைபேசியில் இருந்து ரிசீவர் வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருந்ததை தான் அவதானித்ததாக யோஷித குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், தொலைபேசியில் வேறு ஒருவருடன் நீதிபதி உரையாடியதை அவதானித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தம்பிக்க ஹேமபால ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தபோது, தான் உரையாடிய நபர் ஜினதாச என குறிப்பிட்டார். முன்னாள் ஐ.தே.க அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் உறவினரான அவர், வஜிரவின் செயலாளராகவும் இருந்தார்.

அவருடன் பேசிய விடயம் தனக்கு நினைவில் இல்லையென நீதிபதி குறிப்பிட்டார். ஜினதாச தனது நண்பர் என்றும், இப்பொழுதும் அவருடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

தம்பிக்க ஹேமபால தனது அதிகாரப்பூர்வ தொலைபேசியில் 30.01.2016 அன்று பெற்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அறிக்கை பெற ஆணைக்குழு பொலிசாருக்கு உத்தரவிட்டது