நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு... - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு...

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதிகளவான பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ,இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் தொற்றாளர்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
#LK #srilanka #coronavirus #president #GotabayaRajapaksha