கருணா அணியில் இணைந்தார் தமிழ் அரசு கட்சி உறுப்பினர்: வரவு செலவு திட்டத்தையும் தோற்கடிக்க சதி; கட்சியை விட்டு நீக்க கோரிக்கை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கருணா அணியில் இணைந்தார் தமிழ் அரசு கட்சி உறுப்பினர்: வரவு செலவு திட்டத்தையும் தோற்கடிக்க சதி; கட்சியை விட்டு நீக்க கோரிக்கை!


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவுத்திட்டத்தின் வாக்பெடுப்பு இன்று (26) இடம்பெற்றபோது அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிசாளர் ரஜனிக்கு எதிராக வாக்களித்த இலங்கை தமிழரசுகட்சி முனைத்தீவு வட்டார கிளை உறுப்பினர் சுகிகரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும் தற்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு இலங்கை தமிழரசுகட்சியின் சிறப்பு பொறுப்பாளராக செயலாற்றும் பொ.செல்வராசா, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துகூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த ரஜனி தவிசாளராக கடந்த 2018 ம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அவருக்கு எதிராக எமது இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த முனைத்தீவு வட்டார உறுப்பினரான சுகிகரன் என்பவர் கருணா அணியுடன் இணைந்து எதிர்த்து வாக்களிப்பதற்கு முயற்சி செய்வதாக தாம் அறிந்து இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என நான் பல தடை கூறியபோதும் அதனை பொருட்படுத்தாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் எனது வேண்டுகோளை உதாசீனம் செய்து இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் எதிர்த்து வாக்களித்தருந்தமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையை தோற்றுவிப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை ஏனைய பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்புகளில் பங்காளிக்கட்சிகளின் ஆதரவுதொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தேவை என்பதை எல்லோருமே அறிந்த விடயமாகும்.

இதனை உணராமல் சிறுபிள்ளைத்தனமாக முனைத்தீவு வட்டார உறுப்பினர் நடந்து கொண்டுள்ளார். தன்னிச்சையாக வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவத்திட்டத்திற்கு எதிராக தமிழரசு கட்சி வட்டார உறுப்பினர் எதிர்த்து வாக்களித்த விடயத்திற்கு தமிழரசு கட்சி தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராசா அவர்களின் கவனத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளேன். இதற்கான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு என்னிடம் இல்லை என்பதால் அவரின் மேலான கவனத்திற்கு தெரிவித்துள்ளேன் என பொ.செல்வராசா தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய வாக்கெடுப்பின் போது ஆதரவாக 13 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைத்தன. எதிராக கருணா அணியில் இரகசிய உடன்பாடு ஏற்படுத்திய தமிழரசுகட்சி உறுப்பினர் சுகிகரனும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினரும், கருணாகுழு ஒரு உறுப்பினரும், சுயேட்சைகுழு ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

மேலதிகமாக எட்டு வாக்குகளால் வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நினைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.