மேல் மாகாணத்தில் நள்ளிரவு 12 மணி முதல் தனிமைப்படுத்தல்ட ஊரடங்கு உத்தரவு அமுலாகிறது. எதிர்வரும் நவம்பர் 2 ஆம் தகதி திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
இதேவேளை, ஏற்கனவே மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் முழுமையாகவு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 21 பொலிஸ் பிரிவுகள், களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தலா ஐந்து பொலிஸ் பகுதிகள் ஊரடங்கு விலக்கப்படாமல், தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்த பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலே திங்கட்கிழமை அதிகாலை ஊரடங்கு விலக்கப்படும்.
மேல் மாகாணத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் மருந்தகங்களை இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்,
ஊரடங்கு உத்தரவு சமயத்தில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. சுகாதாரத் துறை ஊழியர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரின் நடமாட்டத்திற்கு காவல்துறை உதவும் என்று இராணுவத் தளபதி கூறினார்.
இதேவேளை, ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களில் வசிப்பவர்களும் நடமாட்டத்தை மட்டுப்படுத்துமாறு இராணுவத் தளபதி பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
நாளை நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு காலத்தில், தெரிவுசெய்யப்பட்ட ட குழுவைத் தவிர வேறு நபர்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிசார் கூறுகின்றனர்.
வார இறுதியில், நோயாளர் காவு வண்டி, அனர்த்த சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமே மேற்கு மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படும். .
மேல் மாகாணத்தில் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் பொலிஸ் சோதனைசசாவடிகள் அமைக்கப்படும்.