Breaking News


ரிஷாத் பதியுதீனை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, ஊடகங்களிடமிருந்து அவரை மறைக்க சி.ஐ.டி அதிகாரிகள் முயன்றதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

6 நாட்களின் பின்னர் சி.ஐ.டியினரால் நேற்று தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீன் நேற்று (19) கைது செய்யப்பட்டார். அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் மக்களை மன்னாரிற்கு வாக்களிக்க அரச பேருந்தில் அழைத்து சென்ற விவகாரத்தில் 95 இலட்சம் ரூபா அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது, தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, ரிஷாத்தை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், அவரது இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்த சிஐடியினர், நேற்று அவரை கைது செய்தனர்.

அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் பெண் இருதய வைத்திய நிபுணர், ஆசிரியர், அவரது மனைவி, ஒரு பொறியியலாளர், ஒரு தொழிலதிபர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரிஷாத்தை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, ஊடகங்களில் இருந்து அவரை மறைக்க சி.ஐ.டியினர் முயன்றதாகவும், ஏனைய சந்தேகநபர்களை முற்படுத்தும்போது இப்படி நடந்து கொள்வதில்லையென்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான திலீபா பீரிஸ் தெரிவித்தார்.  இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்

No comments

Note: Only a member of this blog may post a comment.