Breaking News


நாட்டை உலுக்கும் மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் பரிச்சயமாகி விட்டார் “திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை பெண்“ என ஊடகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட, மினுவாங்கொட கொத்தணி தொற்றின் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண்.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை பெண் கொரோனாவால் பாதிப்பு என வெளியான செய்திகளை தொடர்ந்து, அவரது முகம், முகவரி தெரியாமலே அறியப்பட்ட நபராக மாறி விட்டார்.

அவரது பெயர் பிரதீபிகா சுதர்ஷனி ரத்நாயக்க.

அவர் பற்றி நாடு முழுவதும் பரவிய பெருமளவு வதந்திகள் பரவின. அவர் விடுத்துள்ள வேண்டுகோள்- “கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட முதல் நபராக பலர் என்னை அறிமுகப்படுத்தினர். முதலில், அது இல்லை என்று எழுதுங்கள். தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கூட இதைப் பற்றி பேசியிருந்தார். எனவே அந்த குற்றச்சாட்டில் இருந்து என்னை விடுவிக்கவும்.”  என்பதுதான்.

பிரதீபிகாவின் கதை இனி.

பிரதீபிகா சுதர்ஷனி ரத்நாயக்க, போம்புகம்மன, ஹோரகஸ்முல்ல, திவுலப்பிட்டியில் வசிக்கிறார். இன்னும் வாடகை வீட்டில் வசிக்கிறது அவரது குடும்பம். கணவர் முச்சக்கர வண்டி சாரதி. அத்துடன், இரண்டாவது மகன் அவிஷ்க உள்ளூர் யமஹா டீலர்ஷிப்பில் பணிபுரிகிறார். சுதர்ஷினி, கணவன், இரண்டாவது பிள்ளையின் சம்பளத்தில் குடும்பம் நகர்ந்தது. அவருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்த மகன் பசிந்து லக்மல், இந்த நாட்களில் ராணுவத்தில் சேரவிருந்தார்.

மூன்றாவதாக ஸ்வப்னா திவ்யஞ்சலி. இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார். நிமேஷ் (14) கடைசிப் பிள்ளை.

பிரதீபிகா குறித்து சமூக ஊடகங்களில் பலர் மோசமாக எழுதினர். அவரது நடத்தை தொடர்பில் கண்ணை மூடிக்கொண்டு கதைகளை எழுதினர். அவரது நடத்தை காரணமாகவே கொரோனா தீவிரமாக பரவியதாக அவர்கள் எழுதினர். கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அவர் பலருடன் உறவில் இருந்தார், அதனால் தொற்று விரைவாக பரவியது, சிலருடன் வெளிநாடுகளிற்கு சென்று வந்தார் என இட்டுக்கட்டிய கதைகளை எழுதினார்கள்.

“பி.சி.ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியாக நான் இருக்க முடியும். ஆனால் அது எப்படி நடந்ததென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை பரிசோதிக்க வலுகட்டாயமாகவே நான் கம்பஹா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியிருந்தது. நான் அவ்வாறு செல்லவில்லை என்றால், நாடு இந்த கதையை வேறு வழியில் கேட்டிருக்கும். ”

பிரதீபிகாவின் கூற்றுப்படி, மினுவாங்கொட கொரோனா விரிவாக்கம் செப்டம்பர் 19-20 களில் தொடங்குகிறது. அப்போது அவர் மேற்பார்வையாளராக இருந்த CM 23 பகுதியில் பல பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டனர். கிட்டத்தட்ட 20 பேர் வரை காய்ச்சல், தலைவலி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

“அந்த நேரத்தில், நாங்கள் செய்ததெல்லாம் நிறுவனத்தின் மருத்துவ மையத்திற்குச் சென்று வலி நிவாரணி மருந்துகளைப் பெறுவதுதான். ஏனென்றால், இந்திய நிறுவனத்திற்காக விரைவில் முடிக்க வேண்டிய ஓர்டர் இருந்தது. எப்படியோ, நேரம் செல்ல செல்ல, செப்டம்பர் 27 அன்று, மற்றைய பணிப்பெண்களைப் போலவே நோய்வாய்ப்பட்டேன். அது குறித்து முகாமையாளருக்கு தெரிவித்த போது, “அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். இது ஒரு வைரஸ் காய்ச்சல். போய் பனடோல் குடித்துவிட்டு வேலை செய்யுங்கள் ”என்று திட்டினார். நான் வீட்டிற்கு வந்து என் கணவரிடம் இதைச் சொன்னேன். பின்னர் நானும் சேவைக்குச் சென்றேன்“ என்றார்.

அவர் 27 ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட பிறகும் அது தீராமல் தொடர்ந்தது. நிறுவனத்தின் மருத்துவரிடம் மருந்து எடுத்தும் அது தீரவில்லை. என்னுடன் இருந்த இரண்டு யுவதிகளுடன் மருந்தைப் பகிர்ந்து கொண்டேன். ஏனென்றால் அவர்களுக்கு என் அறிகுறிகள் இருந்தன. இன்னும் சில நாட்கள் இப்படியே சென்றது.

நாட்டை உலுக்கிய கொரோனா பரவலின் அடுத்த அலை இரகசியமாக இப்படி வெடிக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. மார்ச் 30, புதன்கிழமை. பிரதீபிகா, தனது வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிக்கு வரும் நிறுவனத்தின் பேருந்தில் வழக்கம் போல் அதிகாலையில் ஏறினார். அப்போதும் அவர் சோர்வாக இருக்கிறார்.

“நான் அன்று அலுவலக வளாகத்திற்கு வந்து சிறிது நேரம் அங்கேயே கழித்தேன். எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. இது சுவாச அடைப்பு போல் உணர்ந்தேன்”

அந்த நேரத்தில் அவருடன் இருந்த பணிப்பெண்கள் பிரதீபிகாவை நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் அவரைப் பரிசோதித்து இரைப்பை அழற்சிக்கான மருந்தைக் கொடுத்தார். வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்ததன் விளைவாக இந்த சுவாச அடைப்பு ஏற்பட்டிருக்கலாமென மருத்துவர் கூறினார்.

“நான் போதைப்பொருள் பாவிப்பதில்லை. என்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என வலியுறுத்தினேன். அப்படித்தான் நான் கம்பஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்” என்றார்.

இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து பி.சி.ஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவுகள் போயா  நாளான ஒக்டோபர் 01 அன்று அவர் சிகிச்சை பெற்ற விடுதியில் வழங்கப்பட்டது.

“விடுதி மருத்துவர் என்னை அழைத்து, உங்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை, நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார். எனவே நான் என் கணவரின் முச்சக்கர வண்டியில் என் சகோதரியுடன் வீடு திரும்பினேன்“ என்றார்.

பெரும்பாலும் நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருப்பதுதான் வாழ்க்கை. இந்த திடீர் திருப்பம்தான் பிரதீபிகா சுதர்ஷனியின் கதையும். எதிர்பாராத அந்த நாளும் தருணமும் நடந்த விதத்தை சொன்னார்-

“நான் ஒக்டோபர் 1 ஆம் திகதி வீட்டிற்கு வந்தேன். 2 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில், என் கணவரின் மொபைல் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் பிரதீபிகா சுதர்ஷனியின் பி.சி.ஆர். சோதனை முடிவு பொசிட்டிவ் ஆனது, அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என சொல்லப்பட்டது. என்னால் நம்ப முடியவில்லை. முன்னதாக நான் பொசிட்டிவ் இல்லை என்று கூறி மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டேன். ஆனால் ஒருநாள் கடந்து அவர் பொசிட்டிவ் என்றார்“.

சில நிமிடங்கள் கழித்து, பிரதீபிகா சுதர்ஷனியின் கணவர் கயன் மலித் அமரசிங்கக்கு தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வந்தன.

அந்த அழைப்புகள் அனைத்தும் அவர் உடனடியாக சில உடைகளை எடுத்து ஐ.டி.எச். மருத்துவமனைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். பிசிஆர் பரிசோதனைக்கு வீட்டில் உள்ளவர்கள் தயாராக வேண்டும் என்பதை சொல்பவை.

“என் இதயம் பயத்தால் துடிக்க ஆரம்பித்தது. என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நான் அழுதேன். இந்த நேரத்தில் திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் எங்களை மிகவும் அசிங்கமான முறையில் திட்டி  மோசமான கதைகளைச் சொன்னார்கள்.

“நான் என் குழந்தைகளுக்கு உணவளிக்க ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்வது தவறா? அது என்ன மோசமான தொழிலா? ஏன் எங்களுடன் அப்படி பேசுகிறீர்கள்? ” என பிரதீபிகா கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.

“ஏன் அந்த மனிதர் எங்களுடன் இப்படி பேசுகிறார்? நாங்கள் காட்டுமிராண்டி பெண்கள் அல்ல. நாங்கள் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தாலும் எங்களைப் பற்றி அப்படி நினைக்க வேண்டாம்.” என அவர்களிடம் சொன்னேன்.

சற்று நேரத்தில் இன்னொரு வாகனம் வீட்டின் முன் வந்து நின்றது. அதில் அவரை ஐ.டி.எச். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

“அந்த மனிதர்கள் தெய்வங்கள். நாங்கள் நன்றாக பேசினோம். உண்மையில், ஐயா, இன்று நாம் இந்த ஐடிஎச்சில் மிகச் சிறப்பாக கவனிக்கப்படுகிறோம். வைத்தியசாலை சிறப்பாக இயங்குகிறது. ஏனெனில் அங்குள்ளவர்கள் தெய்வங்கள்” என்றார்.

பிரதீபிகா சுதர்ஷனி 9 ஆண்டுகளுக்கும் மேலாக பிராண்டிக்ஸில் பணிபுரிகிறார்.   “பிராண்டிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்த நிறுவனம். நான் அதை விரும்புகிறேன். ஆனால் சில அதிகாரிகள் அல்லது முதலாளிகள் நிறுவனத்தின் பிம்பத்தை மிகவும் மோசமான முறையில் கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள். உண்மையில், அங்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போலல்லாமல், இந்த பிரச்சினையின் போது எங்களுக்கு பொறுப்பாக இருந்த மனிதர்களே மோசமாக நடந்தார்கள். அதனால்தான் நாங்கள் சோகமாக இருக்கிறோம்.

உண்மையில், அவர்கள் செய்த தவறை மூடிமறைக்க, அவர்கள் எங்களை தவறானவர்களாக சித்தரிக்க முயன்றனர். நாங்கள் மோசமான பெண்கள் என ஊடகங்களிற்கு தகவல் வழங்கினர்.

“என் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமையை பாருங்கள். என்னைப்பற்றிய தவறான செய்திகளால் அவர்கள் மிகவும் பாதிக்கபடைந்துள்ளனர். இந்த சமூகத்தை அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்“ என வேதனையுடன் சொன்னார். நிறுவனத்தில் விடுப்பு இல்லாமல் தொடர்ந்து வேலைக்குச் செல்வதற்கான கொடுப்பனவைப் பெற்ற ஒரு பணிப்பெண் என்று பிரதீபிகா சுதர்ஷணி கூறுகிறார். கண்காணிப்பாளராக பணிபுரிந்த அவர், தன்னுடன் இருந்த 20 பணிப்பெண்கள் ஒரு முறை கூட நிறுவனத்தின் வாயிலுக்கு வெளியே கடைக்கு செல்வதில்லை என்று கூறினார்.

தீபிகாவின் கணவர் கயன் தற்போது ஹபரதுவ தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளார். அவருடன் 3 மகன்கள் மற்றும் பிரதீபிகாவின் தந்தையும் உள்ளனர்.

தமது குடும்பத்தை பற்றியும், மனைவியை பற்றியும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளால் தான் வருத்தத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

அவர்கள் 21 வருடங்களின் முன்னர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அனுபவிப்பதை போல மோசமான சம்பவத்தை இதுவரை தாம் அனுபவிக்கவில்லை என்றார்.

“ஆரம்பத்தில் நான் பஸ் டிரைவராக இருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் மோசமான பழக்கங்கள் இருந்தன. அதையெல்லாம் திருத்தி, என்னை உருவாக்கியது என் மனைவிதான். அது திவுலப்பிட்டியிலுள்ள எல்லோருக்கும் தெரியும். என் மனைவி பலருடன் பழகியதாகவும், அவர்களுடன் வெளிநாடு சென்றதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. என் மனைவி வெளிநாட்டில் இருந்ததில்லை. ஒரு விமானத்தின் அருகில் கூட செல்லவில்லை. ஒரு நாள் அல்ல, ஒரு இரவு கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை. காலை 6.45 மணியளவில் வரும் பிராண்டிக்ஸ் பஸ்ஸில் வேலைக்குச் செல்லும் பிரதீபிகா, அதே பேருந்தில் இரவு 8.10 மணியளவில் வீட்டிற்கு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கிறார். நான் நாள் முழுவதும் வீட்டில் வேலை செய்கிறேன், மாலையில் கொஞ்சம் தூங்குவேன். அதுவே எனது வாழ்க்கை முறை.

இப்போது திடீரென போலியான செய்தி பரப்பப்பட்டது. அதை நிறுவனத்தின் ஒரு அதிகாரி செய்தார். தவறை செய்தவர்கள் தப்பித்ததற்காக அவர்கள் என் மனைவியை குறை கூற முயன்றனர்” என்றார்.

தற்போது ஐ.டி.எச் மருத்துவமனைவில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்வப்னா கூறும்போது-

“என் பாடசாலையில் எல்லோரும் என் காரணமாக சிக்கலில் இருந்ததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், அவர்களில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது சோதனைகளில் தெரியவந்தது. ஆனால் சிரமத்திற்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்கச் சொல்லுங்கள். ஐ.டி.எச். மருத்துவமனையில் உள்ள அனைத்து வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் நன்றி. ஏனென்றால் அவர்கள் எனக்கு படிக்க புத்தகங்களைக் கொண்டு வருகின்றனர். இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைவேன். அதுவே எனது இப்போதைய குறிக்கோள்“ என்றார்.

சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனைக்கு தனித்தனியாக அழைத்து வரப்பட்ட பிரதீபிகா மற்றும் ஸ்வப்னா ஆகியோர் தனித்தனியிடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இப்போது இருவரும் ஒரே விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.