யாழ்ப்பாண நகரத்தில் சில கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்து நல்லூரடியில் தங்கியிருந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவரது வர்த்தக நிலையத்தில பணியாற்றிய வேலணை, புங்குடுதீவை சேர்ந்த மேலும் 3 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில், வர்த்தகரின் நேரடி உறவுகளால் யாழில் நடத்தப்படும் சுமார் 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.