“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி


இரத்தினபுரி - குருவிட்ட பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியுடன் தப்பிச்சென்றுள்ளார்.

சிறிபாகம பகுதியில் நேற்றுமுன்தினம் கடமையில் ஈடுப்பட்டிருந்ததன் பின்னர் அவர் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுவரை அவர் தொடர்பில் எந்த தவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அவர், குருநாகலில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று தமக்கு 9 பேரை கொலை செய்வதற்கான தேவைப்பாடுகள் உள்ளதாக குறித்த துப்பாக்கியினை காட்டி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கூறிய 9 பேரில் குருவிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியும் அடங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தப்பிச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான தகவல்கள் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

அவரை, கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.