முன்னணிக்கு பேரிடி: தலைமையின் அழைப்பை நிராகரித்த உறுப்பினர்கள்; யாழ் மாநகரசபையில் மணிவண்ணனுடன் 9 பேர்; அனைவரும் துரோகிகள் என கட்சி பிரகடனம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

முன்னணிக்கு பேரிடி: தலைமையின் அழைப்பை நிராகரித்த உறுப்பினர்கள்; யாழ் மாநகரசபையில் மணிவண்ணனுடன் 9 பேர்; அனைவரும் துரோகிகள் என கட்சி பிரகடனம்!கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக , யாழ் மாநகரசபையிலுள்ள 4 உறுப்பினர்கள் மட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக இயங்கவுள்ளனர் . முன்னணியின் ஏனைய 9 உறுப்பினர்களும் மணிவண்ணன் தலைமையில் இயங்கவுள்ளனர் . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை நேற்று விடுத்த கலந்துரையாடல் அழைப்பையும் அந்த 9 உறுப்பினர்களும் நேற்று புறக்கணித்தனர் . 

வி.மணிவண்ணன் யாழ் மாநகரசபைக்கு மீண்டும் சென்றதையடுத்து , இந்த புதிய நிலவரம் உருவாகியுள்ளது . சுமார் 2 வருடங்களின் பின்னர் வி.மணிவண்ணன் நேற்று முன்தினம் யாழ் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்டார் . அன்றைய தினம் நகரில் அப்பிள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் , மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . சபை அமர்வில் இது தொடர்பில் பிரஸ்தாபித்த மணிவண்ணன் , இந்த விவகாரத்தை கையாள குழு ஒன்றை அமைக்க கோரியிருந்தார் . அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஆனல்ட் , முன்னணி சார்பில் ஒருவரை பரிந்துரைக்கும்படி கேட்டார் . அப்போது வ.பார்த்திபன் எழுந்து மணிவண்ணனை பிரேரிக்கார் . முதல்வர்

இந்த நிலையில் நேற்றுக்காலை ( 30 ) முன்னணி சார்பில்பேசவல்ல ஒருவர் யாழ் மேயர் ஆனல்ட்டை தொடர்பு கொண்டு , " அந்த குழுவில் வி.மணிவண்ணனை போடமுடியாது . இது செயலாளரின் கட்டளை " பாகுபலி ரேஞ்சில் கதைத்துள்ளார் . உங்கள் கட்சி செயலாளர் செ.கஜேந்திரன் எனக்கு உத்தரவிட முடியாது . உங்கள் கட்சி பிரச்சனையை கட்சிக்குள் தீர்த்துக் கொள்ளுங்கள் . இது சபை முடிவு என கூறி , முதல்வர் அழைப்பை துண்டித்து விட்டார் . இதையடுத்து , முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களை அவசர கலந்துரையாடல் ஒன்றிற்கு வருமாறு முன்னணியின் தலைமை அழைத்தது . 

ஆனால் , வி.மணிவண்ணண் , ம.மயூரன் , மற்றும் இரண்டு பெண் உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை . " இதை ஏனைய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி , மாநரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறோம் . ஒரு பகுதியினரை நிறுத்தி , இன்னொரு பகுதியினரை அழைத்து பிரிவினையை வளர்க்காதீர்கள் . அனைவரும் வருகிறோம் . ஒற்றுமையாக பேசி தீர்ப்போம் " என உறுப்பினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது .

" அந்த பேச்சிற்கெல்லாம் இடமில்லை . நாம் அழைத்தால் நீங்கள் வர வேண்டியதுதான் " என கஜேந்திரன் தரப்பில் சொல்லப்பட்டது . இறுதியில் , 4 உறுப்பினர்கள் மட்டும் சந்திப்பில் கலந்து கொண்டனர் . அவர்கள் கஜேந்திரன் ஆதரவு குழுவினர் . மணிவண்ணன் தரப்பில் 4 பேருக்கு அழைப்பில்லை . அழைப்பு விடுத்தும் 5 உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணித்தனர் . இதன்மூலம் மாநரசபையில் மணிவண்ணன் தரப்பின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது .

 கஜேந்திரகுமார் , கஜேந்திரன் சந்திப்பில் கலந்து கொண்டனர் . அந்த 4 பேரையும் பலமாக பாராட்டிய கஜேந்திரர்கள் , நீங்கள்தான் கொள்கைகுன்றுகள் , சரியான வழியில் நடப்பவர்கள் என தட்டிக் கொடுத்து , மாநகரசபைக்குள் அவர்கள் 4 பேரையும் தனியாக இயக்கும்படி குறிப்பிட்டனர் . அவர்களிற்கு ஒரு குழுததலைவரும் நியமிக்கப்பட்டார் . எனினும் , சந்திப்பில் கலந்த கொண்ட சிலர் , முன்னணியின் இந்த நகர்வு மோசமானது . இப்படி 4 பேர் கொண்ட குழுவாக இயங்கியபடி மக்கள் முன் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டனர் .

கஜேந்திரகுமார் ஓரளவு அது பற்றி பேச முற்பட்டாலும் , கஜேந்திரன் குறுக்கிட்டு அதை தடுத்துக் கொண்டிருந்தார் . " யாழ் மாநகரசபையிலுள்ள முன்னணி உறுப்பினர்களில் நாம் அழைப்பு விடுத்தும் வராதவர்கள் அனைவரும் துரோகிகள் . அவர்களை ஒரு மாதத்திற்குள் எமது இயக்க்திலிருந்து நீக்கி புதியவர்கனை நியமிப்போம் " என கஜேந்திரன் இதன்போது பகிரங்கமாக அறிவித்தார் . முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு நேற்று வெளிப்படையாகியுள்ளது .