Breaking News


மேலும் 51 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,842 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 51 பேரில், மினுவங்கோகொட ஆடைத்  தொழிற்சாலை தொழிலாளர்களின் தொடர்பை பேணிய 36 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைச் சேர்ந்த 15 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று ஏற்கனவே 39 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, இன்று இதுவரை 90 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்று எண்ணிக்கை 1,397 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 13 மருத்துவமனைகளில் 1,512 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 306 நபர்களும் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.