திருகோணமலை மீன் சந்தைக்குள்ளும் கொரோனா: 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்; சந்தை மூடப்பட்டது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

திருகோணமலை மீன் சந்தைக்குள்ளும் கொரோனா: 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்; சந்தை மூடப்பட்டது!


திருகோணமலை மத்திய மீன் சந்தையில் பணிபுரியும் 6 வர்த்தகர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, இன்று (24) மீன் சந்தை மூடப்பட்டது.

மீன் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் 39 பேரிடம் 22 ஆம் திகதி எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளின் முடிவுகளின்படி, அவர்களில் 06 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அடையாளம் காணப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டை மற்றும் சுமேதகம பகுதிகளில் வசிப்பவர்கள்.