5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA!


இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்காக 05 மாவட்டங்கள் தொடர்பாக உடனடியாக முடிவெடுக்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் கொரோனா கணிசமாக பரவி வருவதாக வைத்தியர் ஹரித அலுத்ஜே சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்பதால், பாதிக்கப்பட்ட 05 மாவட்டங்கள் குறித்து அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.

அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கத் தவறினால், சமீபத்தில் கண்டறியப்பட்ட பேலியகொட கொத்தணி போன்று நாடு முழுவதும் அதிகமான கொரோனா கொத்தணிகள் உருவாகும் என்று சுட்டிக்காட்டினார்.