தனி மரமானார் ஹக்கீம்: வேலி பாய்ந்தனர் 4 எம்.பிக்களும்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தனி மரமானார் ஹக்கீம்: வேலி பாய்ந்தனர் 4 எம்.பிக்களும்!


நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. யாரும் எதிர்பாராத விதமாக 8 எதிரணி உறுப்பினர்கள் திருத்தத்தை ஆதரித்தனர்.

இதில் 4 பேர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் 5 ஆசனங்களை வென்றது. அதில், ரவூப் ஹக்கீம் தவிர்ந்த ஏனைய 4 உறுப்பினர்களும் 20வது திருத்தத்தை ஆதரித்தனர்.

நஸீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் 20வது திருத்தத்தை ஆதரித்தனர்.

கட்சியாக திட்டமிட்டு இப்படி வாக்களித்தார்களா, அல்லது 4 உறுப்பினர்களும் அரச தரப்பில் சலுகைகளை பெற்று ஹக்கீமின் காலை வாரினார்களா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எதிர்க்கட்சியிலிருந்து 20வது திருத்தத்திற்கு ஆதரவளித்த நசீருக்கு காசை காட்டி கிண்டல் பண்ணும் வீடியோ