3ஆம் திகதி பேச்சாளர் அறிவிக்கப்படுவார்: மாற்றத்தை ஏற்படுத்த சம்பந்தனே அதிக தீவிரம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

3ஆம் திகதி பேச்சாளர் அறிவிக்கப்படுவார்: மாற்றத்தை ஏற்படுத்த சம்பந்தனே அதிக தீவிரம்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பேச்சாளர், கொறடா தொடர்பில் இறுதி அறிவித்தல் எதிர்வரும் 3ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இறுதியான அறிவித்தலை இரா.சம்பந்தன் விடுப்பார் என நம்பகரமாக அறிய முடிகிறது.

புதிய பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள். அதில் இரா.சம்பந்தனும் ஒருவர். எஞ்சிய 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுமந்திரன் அணியை சேர்ந்த சிறிதரனை ஆதரிக்கிறார்கள். எனினும், அதில் அம்பாறை தேசியப்பட்டில் எம்.பி, த.கலையரசன் வாக்களிக்க முடியாது என பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் வாக்குகளில் கிடைத்த தேசியப்பட்டியல், கட்சி தலைவருக்கே தெரியாமல் சதி நடவடிக்கையின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த ரெலோ தலைமைக்குழு கூட்டத்தில், பேச்சாளர் பொறுப்பை ரெலோவிற்கு வழங்க சில தினங்களின் முன்னரும் இரா.சம்பந்தன் வழங்க உறுதியளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எம்.ஏ.சுமந்திரனின் அண்மைய நடவடிக்கைகளில், இரா.சம்பந்தனும் பெரும் அதிருப்தியடைந்துள்ளார் என தமிழ் பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. இதனால் பேச்சாளர் மாற்றம் அவசியமென்பதில், கூட்டமைப்பில் அதிக அக்கறையை இரா.சம்பந்தனே காண்பிக்கிறார்.

3ஆம் திகதி கொரோனா காரணம், உறுப்பினர்களின் சமூகமின்மை போன்ற காரணங்களால் நாடாளுமன்ற குழு கூட்டம் நடக்காமல் போனால், இரா.சம்பந்தனே அன்றைய தினம் புதிய நியமனங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் அறிய முடிகிறது.