Breaking News


முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இருந்து நேற்றயதினம் 250 இற்கும் மேற்ப்பட்டவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளனர் குறிப்பாக கட்சியின் முக்கிய பதவிகளை வகித்திவர்களான

கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினர் கட்சியின் பிரதேச சபைஉறுப்பினர்களி வழி நடத்தும் குழுத்தலைவர் ரஜனிகாந் , மத்திய குழுவின் செயலாலரும் கட்சியின் நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பாளருமான .

சசிக்குமார் யுணைட்டட் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மலையாளபுரம் அமைப்பாளர் சாம், பொன்நகர் அமைப்பாள்ர் ஜெகாந் ,திருநகர் அமைப்பாள்ர் சுமன், ஆனந்தபுரம் அமைப்பாளர் யோகலிங்கம், ஆனந்தபுரம் மகளீர் அணித்தலைவி சியா அடங்கிய உறுப்பினர்கள், ஆனந்தபுரம் இளைஞர் அணி தலைவர் தினேஸ், கட்சியின் 150இற்கும் மேற்ப்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள், விவேகானந்தபுரம் செயற்பாட்டாள்ர் யோகா, உட்ப்பட 250 மேற்ப்பட்டவர்களே இன்றையதினம் கட்சியை விட்டு விலகியுள்ளனர்

இவர்கள் பதவி விலகியமைக்கு காரணம் என்ன என்று வினவிய பொழுது

நேற்றுநடைபெற்ற சமத்துவக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன் , எழுத்தாளரும் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கருணாகரன் மற்றும் கட்சியின் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோரின் தன்னிச்சியான முடிவின் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வேங்கை என்பவரை கிளிநொச்சி ,முல்லைதீவு,வவுனியா,மன்னார் போன்ற நான்கு மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்தமைக்கு எதிர்புத் தெரிவித்து அனைத்து பிரதேச அமைப்பாளர்களையும் அழைத்து எக மனதாக ஒருவரை தெரிவு செய்யுமாறு கோரியமையை ஏற்காமல் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களை புறம்தள்ளி கட்சி ஒரு சிலரின் விறுப்பு வெறுப்புக்களுக்கு கட்சி இயங்குவதால் கட்சியை விட்டு தாங்கள் வெளியேறியதாக தெரிவிக்கின்றனர்

சமத்துவக் கட்சியில் இருந்து அண்மைக் காலமாக பலர் வெளியேறி உள்ளனர் குறிப்பாக முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் பிரத்தியேக சாரதிகளனா கண்னன்,சூட்டி,தவராசா ஆகியோர் வெளியேறிய நிலையில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன் என்பவரது சகோதரன் தயா சாரதியாக நியமிக்கப்பட்டுள்ளார் அதுமட்டுமல்லாது முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் பிரத்தியேக உதவியாளர் திலீபனும் கடந்தவாரம் கட்சியை விட்டு வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments

Note: Only a member of this blog may post a comment.