Breaking News



பயங்கரவாதி சஹ்ரானின் குழுவினர் 20 தற்கொலைதாரிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்ட விடயம் வெளியாகியுள்ளது . உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் , பொலிஸ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட துணை ஆய்வாளர் ஒருவர் அளித்த சாட்சியத்தில் இது தெரிய வந்துள்ளது . நேற்று ( 16 ) அவர் சாட்சியமளித்திருந்தார் . 

மேலும் சாட்சியமளித்த அவர் , பாணந்துறை , சரிகம்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சஹ்ரான் உள்ளிட்ட 7 பேர் , 2019 மார்ச் 27 கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர் . இதன்போதே , 20 தற்கொலைதாரிகளை கொண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் தீட்டப்பட்டது . 

முதலாவது தாக்குதலில் தப்பிக்க முயற்சிக்கும் நபர்களை இலக்காகக் கொண்டு , இரண்டாவது தாக்குதல் திட்டமிடப்பட்டது . பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் போது மற்றொரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் .

" கூட்டத்தின் போது அவர்கள் நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியைத் தேர்வுசெய்து அங்கு மற்றொரு தாக்குதலை நடத்த முடிவு செய்தனர் . நியூசிலாந்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் , சிரியாவில் ஐ.எஸ் மீதான தாக்குல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்கொலை குண்டுவெடிப்பு இருக்க வேண்டும் என்று சஹ்ரான் ஹாஷிம் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்திருந்தார் .

 இந்த தாக்குதல் கத்தோலிக்க தேவாலயங்கள் , கசினோக்கள் மற்றும் வெளிநாட்டினர் அடிக்கடி வரும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது . கூட்டத்தில் கலந்து கொண்ட சஹ்ரானும் மற்றவர்களும் தற்கொலை குண்டு தாக்குதல்களிற்காக சத்தியம் செய்தனர் , " என்று அவர் கூறினார் . 

சஹ்ரானின் சகோதரர் ரில்வான் சேகரித்த குண்டுகள் அந்தக் காலகட்டத்தில் காலாவதியாகும் நிலையில் இருந்தன . இதனால் கூட்டம் நடந்த நாளில் ( 2019 மார்ச் 27 ) இருந்து 15 நாட்களுக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டதும் விசாரணைகளில் தெரிய வந்ததாக அவர் மேலும் கூறினார் . 

அதன்படி , 15 நாட்களுக்குள் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது . ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ( ஏப்ரல் 21 ) தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பாக பரிந்துரைக்கப்படவில்லை என்றும் ,

No comments

Note: Only a member of this blog may post a comment.