ஒரேநாளில் 2வது அதிகபட்ச எண்ணிக்கை: இன்று 609 பேருக்கு கொரோனா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ஒரேநாளில் 2வது அதிகபட்ச எண்ணிக்கை: இன்று 609 பேருக்கு கொரோனா!


இன்று 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கையில் நாளொன்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்றாளர் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நாட்டில் பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 6,896 ஆக அதிகரிக்கிறது.

இன்று பதிவாகியுள்ள 609 தொற்றாளர்களில்- 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து  48 பேர், மினுவாங்கொட ஆடைத் தொழிலாளர்களின் 40 தொடர்பாளர்கள், பேருவளை மீன் பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 20 பேர், மற்றும் காலி மீன்பிடி துறைமுகத்தில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி மினுவாங்கொட தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,426 ஆக அதிகரித்தது.

3,238 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிலிருந்து 83 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,644 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று சந்தேகத்தில் 426 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.