சீனாவினால் இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. 600 மில்லியன் யுவான் (16.5 பில்லியன் ரூபா) நிதியுதவி அளிக்கவுள்ளதாக சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையும் சீனாவும் 16.5 பில்லியன் மானிய உதவியிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த மானியத்தைத் தவிர, சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர் சலுகைக் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடும் என்று சண்டே டைம்ஸ் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.