சிகையலங்கார உரிமையாளருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட 125 பேர் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

சிகையலங்கார உரிமையாளருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட 125 பேர்


சிகை அலங்கார நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கஹாத்துடுவ பிரதேசத்தில் பிரதேச சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிகை அலங்கார நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் சிகை அலங்காரம் செய்துக்கொண்ட 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த கஹாத்துடுவ மீன் வியாபாரி ஒருவர் இந்த சிகை அலங்கார நிலையத்திற்கு வந்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் மூலம் சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

28 வயதான இந்த சிகை அலங்கார நிபுணர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவரது வீடு மற்றும் 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.