விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்!


இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

2009 ஜனவரி மாதம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

58வது படையணியை சேர்ந்த, டான் திலான் பிரசன்னா என்பவரே உயிரிழந்தார். இவர் பதுளையை சேர்ந்தவர்.

படுகாயமடைந்த நிலையில் பேச, உணவு உண்ண முடியாத நிலையில், இராணுவ பராமரிப்பு நிலையமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்தார். குழாய் வழியாக திரவ உணவுகளையே உட்கொண்டு வந்தார்.

உடல்நலம் குன்றிய நிலையில் நேற்று (21) காலை நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்