Breaking News



வெடுக்கு நாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலி ருந்து நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ் வரர் வரை தரிசன யாத் திரை இடம் பெறவுள்ளது . 

இலங்கை முதலுதவி சங்க இந்து சமய தொண்டர் சபையின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள தரிசன யாத்திரை எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 06.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திலிருந்து ஆரம்பமாகவுள்ளது . 

பின்னர் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சென்று 11 பானைகளில் பொங்கல் மற்றும் நாம பஜனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . இந்த தரிசன யாத்திரையில் இணைய விரும் பும் ஆண்கள் வேட்டி அணிந்தும் , பெண் கள் சாறி அல்லது பஞ்சாபி அணிந்து கலாசாரத்தை பேணும் வகையில் பக்தி யுடன் கலந்து கொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் .

 குறித்த தரிசன யாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அடியவர்கள் 0779236552 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு வரவை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . ( 18 )

No comments

Note: Only a member of this blog may post a comment.