Breaking News


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஸாட் பதியுதீனிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினமும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானுடன் தனக்கும் தனது சகோதரரர்கள் இருவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ரிஸாட் பதியுதீன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் அவர் சாட்சியம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தாம் கொண்டிருக்கும் அரசியல் தீர்மானங்களுக்காக தனது சகோதரர்களை அரசாங்கம் பழிதீர்க்கின்றது.

சஹ்ரான் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு தனது சகோதரன் உதவிசெய்ததாக பொய்யான குற்றச்சாட்டு இருப்பதாகவும், அதுபற்றி விளக்கம் வழங்க அவர் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியும் இதுவரை விளக்கம் அளிப்பதற்கான திகதியோ அல்லது ஆணைக்குழுவிடமிருந்து பதிலோ கிடைக்கப்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.