கொரோனாவால் வேலையிழந்த யுவதி போதைப்பொருள் கடத்தி சிக்கினார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கொரோனாவால் வேலையிழந்த யுவதி போதைப்பொருள் கடத்தி சிக்கினார்!


கொரோனா வைரஸ் லொக் டவுனால் வேலையிழந்த விமானப் பணிப்பெண் ஒருவர், போதைப்பொருள் கடத்தியபோது சிக்கியுள்ளார். அவருக்கு 28 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்த சம்பவம் நடந்தது.

ரியான் எயார், விஸ் எயார் நிறுவனங்களில் பணிபுரிந்த அலெக்ஸாண்ட்ரா டோப்ரே (27) என்பவரே சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார். ருமேனியாவை சேர்ந்த அவர், பிரித்தானியாவில் தங்கியிருந்து தொழில் புரிந்து வந்தார்.

லண்டன் லூட்டன் விமான நிலையத்தை மையமாக கொண்டு பணியாற்ற வந்தார். எனினும், கொரொனா நெருக்கடிக்கு பின்னர் வேலையிழந்திருந்தார்.

லொக் டவுன் காலத்தில் டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான ஒருவரை, ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில் சந்தித்தார். யுவதிக்கு தீவிர பணப்பற்றாக்குறை நிலவியது. அதை சமாளிக்க டேட்டிங் நண்பர் கொடுத்த ஐடியாதான போதைப்பொருள்இந்த ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு ஸ்டோஃபோர்ட்ஷையர் பொலிசார் அவரது வாகனத்தை சோதனையிட்ட போது கொகோயின் போதைப்பொருளை மீட்டனர்.

வேலையை இழந்த பின்னர் தங்குமிடமும் இல்லாமல் போன நிலையில், ஆண் நண்பர் ஒருவரால் அவர் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டார் என, அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

டோப்ரே சிக்கியதும், அவரது டேட்டிங் நண்ரான போதைப்பொருள் வழங்கியவர் தலைமறைவாகி விட்டார்.

போதைப்பொருள் கடத்தலில் முதல் வகுப்பு குற்றத்தை அவர் புரிந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, போதைப்பொருள் சங்கிலியின் முக்கிய அங்கமாக அவர் செயற்பட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.