யாழ் மீசாலையில் பௌத்த துறவிகள், சிங்கள மக்கள் மீது தாக்குதல் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழ் மீசாலையில் பௌத்த துறவிகள், சிங்கள மக்கள் மீது தாக்குதல்


பெலிஹட்ட என்னும் ஊரில் இருந்து வடக்கு கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா வருடம்தோறும் இடம்பெறுகின்றது.

அத்துடன் அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்து நன்கொடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கர்ப்பிணித் தாய்மார்கான பொருட்கள் என்பனவற்றை வழங்கிச் செல்கின்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வருடமும் ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும் நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேரைக் கொண்ட புகையிரதம் நேற்றைய தினம் வருகை தந்திருந்தனர்.

இதன்போது அவர்கள் ஊர்காவற்துறை பகுதியில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட புகையிரதம் மாலை மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக பளை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு தாக்குதலில் காயமடைந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் பளை போலீசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த முதியவர் மீண்டும் அந்த புகையிரதத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.