கூட்டமைப்பின் பின்னடைவிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணமென்பதை நிராகரிக்க முடியாது: இரா.சம்பந்தன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கூட்டமைப்பின் பின்னடைவிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணமென்பதை நிராகரிக்க முடியாது: இரா.சம்பந்தன்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கள், கட்சியின் பின்னடைவிற்கு ஒரு காரணமாக இருக்கலாமென ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதை நிராகரிக்க முடியாது. சுமந்திரனிற்கு கருத்து சொல்ல சுதந்திரமுள்ளது. ஆனால் தேர்தல் காலங்களில் கருத்து சொல்லும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவிற்கு முதல் காரணமும், முக்கிய காரணமாகவும் அதுதான் என நான் கருதுகிறேன். ஆனால், அரசியல் தீர்வை பெறுவது நாங்கள் மாத்திரம் மேற்கொள்ளும் விடயமல்ல.

அரசியல் தீர்வு ஏற்படாதது, காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒரு தீர்வை காணாதது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படாமல் போனது என பல காரணங்களாலும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரனின் கருத்துக்களும் பின்னடைவிற்குஒரு காரணமென்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அவரது கருத்துக்கள் எல்லாம் கட்சியின் கருத்துக்கள் என நான் சொல்ல மாட்டேன். அவருக்கும் கருத்துக்களை சொல்ல சுதந்திரமுண்டு. ஆனால், விசேடமாக தேர்தல் காலங்களில் கருத்துக்கள் கூறும்போது மிகவும் அவதானமாக, பாதகங்கள் ஏற்படாமல் கருத்துக்கள் கூறப்பட வேண்டிய அவசியமுள்ளது. சில பல கருத்துக்கள் பாதகங்கள் ஏற்பட்டது என்பதை நாம் நிராகரிக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது மக்களும், கட்சியும் தீர்மானிக்க வேண்டிய விடயம். கட்சியின் தீர்மானங்களை மதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.