Breaking News


குழந்தைகளை கண்டால் பார்ப்பவர்களுக்கே கொஞ்ச தோண்றும் ஆனால் ஒரு தாய்க்கு கொலை செய்ய தோண்றியுள்ளது என்றால் அந்த தாயின் இதயம் எத்தகைய கொடூரமானது..மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகதத்தின் பேரில் வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15ம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட கோஷனி என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மூத்த பிள்ளைக்கு இரண்டரை வயது எனவும் அவர் தொடர்ந்து தாய்ப்பால் குடித்துவந்துள்ளதாகவும், அந்த நிலையில் இரண்டாவது பிள்ளை கருவுற்று பிறந்த பின் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளதனால் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்கும்போது, மூத்தபிள்ளை என்னை முறைத்து பார்ப்பதுடன் தந்தையிடம் அம்மா தன்னை கவனிப்பதில்லை என தெரிவித்து வந்துள்ளார் எனவும். மூத்த பிள்ளை என்னிடம் வருவது குறைவடைந்துள்ளது. இதனால் நான் குழப்பமடைந்திருந்தேன்.

இதனால் யாரும் இல்லாத வேளை, குழந்தையின் வாயில் துணியை அடைந்து கொன்று. பின்னர் முன் வீதியில் உள்ள கிணற்றில் போட்டேன் என்று அப்பெண் கூறியுள்ளார். ஆனால் விசாரணையில் உறவினர்களின் வாக்கு மூலம் கிடைக்க பெற்ற தகவல் தான் உண்மையானது. தான் பெற்ற 2 குழந்தைகளையும் சரிவர கவனிக்க முடியாத இந்த தாய் தன் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கூட சரிவர கொடுத்து வளர்க்கவில்லை. தாயின் பராமரிப்பு குறைவாக இருந்த போதிலும் தந்தையின் உறவினரின் அரவணைப்பிலே இரு குழந்தைகளும் அநேக நேரம் வளர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கல்லடி இசைநடன கல்லூரியில் நியமனம் கிடைத்த இந்த வேளையில் தான் வேலைக்கு செல்வதற்கு குழந்தை ஒரு தடையாக இருப்பதாக கருதிய தாய். தனது வீட்டாரிடம் குழந்தையை காட்டி விட்டு வருவதாக கணவனிடம் சொல்லி எடுத்துச்சென்று. தனது தாயின் வீட்டில் வைத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.என்று தெரியவருகிறது.

ஆனால் தனக்கு ஏதோ மன நிலை சரியில்லாதது போல இவர் நடித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.