வெலிக்கடை சிறைக்கைதியொருவரின் மலக்குடலில் சிக்கியுள்ள கையடக்க தொலைபேசியை மீட்டெடுக்க, அந்த கைதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசியை மீட்டெடுக்க வெலிக்கடை சிறை மருத்துவமனையின் மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காததை தொடர்ந்து, கைதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் சிறைக்கு திரும்புவதற்கு முன்னர் ஒரு கையடக்க தொலைபேசியை பெற்று, அதை தனது ஆசன வாய் ஊடாக மலக்குடலில் செலுத்தியுள்ளார்.
சிறை திரும்பிய பின்னர் அதை மீட்க முடியாமல் அவர் சிரமப்பட்டு, பின்னர் உடல் உபாதையுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.