கொரோனா தடுப்பூசிக்காக கொல்லப்பட்ட ஐந்து இலட்சம் சுறாக்கள் - வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்காக கொல்லப்பட்ட ஐந்து இலட்சம் சுறாக்கள் - வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல்கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க சுமார் 5 இலட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சில கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் ஸ்குவாலீன் என்கிற ஒரு மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருள் சுறாக்களின் கல்லீரலில் காணப்படும் ஒரு இயற்கையான எண்ணெயில் கிடைக்கிறது. ஸ்குவாலீன் தற்போது மருத்துவத்தில் ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான கிளாசோஸ்மித்க்லைன் காய்ச்சல் தடுப்பூசிகளில் சுறா ஸ்குவாலீன் பயன்படுத்துகிறது என்று ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை கூறுகிறது.