Breaking News


12.15- யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் இன்றைய பத்திரிகையின் பிரதிகளை போராட்டக்காரர்களிடம் விநியோகித்தார். இதன்போது தமிழ் பொலிஸ்காரர் ஒருவர் அடாவடியாக பத்திரிகை பிரதிகளை பறித்து, பத்திரிகைகளை விநியோகிக்க முடியாது என்றார். இதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பத்திரிகை பிரதிகளை மீள கொடுத்து விட்டு சென்றார் பொலிஸ்காரர்.

11.30- உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்திற்கு பல்கலைகழக மாணவர்கள் சிலர் வந்தனர். உடனே பரபரப்படைந்த பொலிசார் அவர்களை முற்றுகையிட்டனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவிற்கு சென்ற மாணவர்கள், போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்க அங்கு வந்தனர். சட்டத்தரணி என்.சிறிகாந்தா அந்த இடத்திற்கு சென்று, நிலைமையை சுமுகமாக்கினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.