தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40 ) என்பவரே உயிரிழந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தென்னாபிரிக்க தூதரகத்தின் உதவி இயக்குனராக கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் பணியாற்றி வருகிறார்.இந்தப்பதவிக்கு முன்னர் அவர் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.