ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமுகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பன்னல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அணியப்பட வேண்டிய ஆடை தொடர்பான விதிமுறைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சட்டம் இல்லை எனவும் தேசிய கைத்தொழிலை ஊக்குவிக்க தேசிய ஆக்கங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திக் ஆடைகளை அரச ஊழியர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவர் மத்தியில் பிரபலப்படுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பத்திக் ஆடை இறக்குமதியை நிறுத்தி உள்ளூர் பத்திக் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.