Breaking News



நடிகை ஸ்ரேயா சரண், சிவாஜி தி பாஸ், கந்தசாமி, ரெளத்திரம் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கடைசியாக 2018-ம் ஆண்டு நடித்த அவர், திருமணத்துக்குப் பிறகு முழு நேர நடிப்புக்கு ஒரு சிறிய இடைவெளி எடுத்திருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா சரண், நடிகைக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் கணவருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களில் சில ரொமாண்டிக் படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது. அவர் அந்த பதிவில் "ஒரு அழகான பிறந்த நாள் @andreikoscheev நன்றி. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கு நன்றி" என்று எழுதியுள்ளார். வழக்கம் போல வேற லெவலில் இருந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.










No comments

Note: Only a member of this blog may post a comment.