மட்டக்களப்பு புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் இச்சம்பவம் இடபெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உதவி பொலிஸ் அத்தியட்ச்சகரின் வழிகாட்டலில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த சிலை மீட்க்கப்பட்டுள்ளது.
கல்குடா பிரதேசத்தில் அன்மையில் ஆலயமொன்றில் சிலையொன்று இனம்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையை நடந்தியுள்ளனர்.
இதன்போதே அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளதாகவும் இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் சந்தேக தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.