Breaking News


மீண்டும் தன் கோரத்தாண்டவத்தை ஆடப்போகும் கொறோனாவின் இரண்டாம் கட்டத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் .

சுவிஸ் நாட்டில் பல தமிழ்க்குடும்பங்களுக்கு ஓரிரு நாட்களில் கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யக்கூடியதாகவுள்ளது.

அதுவும் பேர்ன் , சூரிச், மாநிலங்கள் பெரிய அளவிலும் ...பிறிபூர்க் , சொலுத்தூண் மாநிலங்கள் அடுத்த கட்டமாகவும் தமிழர்கள் பாதிப்படைந்துள்ளதாக அறியப்படுகிறது, பேர்னில் Biel, Lyss, Buswill பகுதிகளில் குடும்பம் குடும்பமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் பொது இடங்களில் கூடுவதையும் , வீடுகளுக்கு விருந்தினராக பயணிப்பதையும் கூடியவரை எம்மவர்கள் தவிர்ப்பதும் சுயபாதுகாப்பை அனைவரும் உறுதிசெய்வதையும் கவனத்தில் எடுக்கவும் .

சுவிஸ் நாட்டைப்பொறுத்தவரை வேறு மாநிலங்கள் முன்னணியில் இருந்தபோதும் தமிழர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முன்னிலைதொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என குறித்த தகவல் குறிப்பிடுகிறது.

இதுவரை 1762 பேருக்கு மேல் சுவிஸ் நாட்டில் COVID-19 நோயால் மரணத்தை தழுவியுள்ள நிலையில், வாழும் ஆசையுள்ளோர் அல்லது தன்குடும்பத்தில் அக்கறையுள்ளோர், சமூகத்தில் ,இனத்தில் என உயிர்விரும்பிகள் அந்த அறிகுறிகள் தமக்குஇருக்குமிடத்தே தங்களை தனிமைப்படுத்தி தற்காப்பதோடு.. மற்றவர்க்கும் மனிதநேயத்தோடு பரவாமல் தடுக்க அரசு விதித்த சட்டங்களை மதித்து, முகவுறை கையுறை அணிந்து பொது இடங்களை பாவனைக்குட்படுத்துமாறு அன்புரிமையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நோய்த்தொற்று வருவது அவமானமல்ல ! அதோடுதான் வாழ்கிறோம் . அனைவருமே இதற்கு விரும்பியோ விரும்பாமலோ முகம்கொடுக்கத்தான் வேண்டும் .

உங்கள் உடல்நிலை எதிர்ப்பு சக்தி இல்லாது போனால் அல்லது ஏற்கனவே வேறுசிலர் பல நோய்களுக்கு ஆட்பட்டிருப்போர் இதன் வீரியத்தாக்குதலை அவற்றோடு சேர்ந்து எதிர்கொள்ள முடியாது மரணத்திடம் மண்டியிடக்கூடும்.

கூட்டங்கள் , பூப்புனித நீராட்டு விழா ,திருமண ,பிறந்தநாள் நிகழ்வுகளே தமிழர்களின் தொற்றுக்கு பெரிதும் காரணமாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் நாட்களில் இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

சுவிஸ் நாட்டைப்பொறுத்தவரை அன்றன்றைக்கே பாராளுமன்றத்தில் பேசி முடிவெடுத்த கணமே மக்கள் சட்டத்தை மதித்து நடப்பதால் தான் சுவிஸ் தற்காக்கப்பட்ட நாடாகவுள்ளது.

தமிழர்கள் பலர் இதைக் கைக்கொண்டவர்கள் தான் என்றபோதும் நம்மை ஒன்றும் செய்யாது என்ற அசட்டையீனம் இப்போது கொடிய கொரோனாவுக்கு முகம்கொடுத்துள்ளனர் .

அவதானம் மக்களே ..! இவ் நோயிலிருந்து தப்பினாலும் உங்கள் மூச்சுக்குளாய்கள் முன்புபோல்மூச்சுவிட சாதாரணமானதாக இருக்கமாட்டாது! அத்தோடு மறுபடியும் இதே நோய் மீண்டும் வராது எனபதற்கான உத்தரவாதமும் தரப்படவில்லை!

பாடசாலை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதால் மிகவும் பெறுப்புடன் அனைவரும் நடந்து கொள்வது நல்லது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • கொறோனா தொற்று மிகவும் கூடுதலான பொதுவான அறிகுறிகள்:

காய்ச்சல்

வறட்டு இருமல்

சோர்வு

  • கொறோனாகுறைவான பொது அறிகுறிகள்:

உடல் வலிகள்

தொண்டை வலி

வயிற்றுப்போக்கு

இமைப்படல அழற்சி (Conjunctivitis கான்ஜுன்க்டிவிடிஸ்)

ஒற்றைத் தலைவலி

சுவை அல்லது வாசனை இழப்பு

கைவிரல்கள் அல்லது கால்விரல்களின் நிறமாற்றம், அல்லது ஒருவித சொறி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடவும் .

இன்று உங்களுக்கு கொறோனாவரவில்லை என்பது மகிழச்சி!

நாளை வராமல் தடுக்க தற்பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் உறவுகளே நட்புக்களே..!

இரண்டாம் கட்டத் தாக்குதல் பேரழிவைத்தரும் என உலகம் எதிர்பார்த்திருக்கையில் நாம் 3 ம் கட்டத் தாக்குதலைக்கூட எதிர்கொள்ளத் தயாராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


No comments

Note: Only a member of this blog may post a comment.