அனைத்து துப்பாக்கி அனுமதி உரிமையாளர்களும் ஒக்டோபர் 1 முதல் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கியை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க துப்பாக்கி (திருத்த) சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.
2020 டிசம்பர் 31 க்குப் பிறகு துப்பாக்கி அனுமதி புதுப்பிக்கப்படாது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.