Breaking News



வடக்கின் பெறுமதியான நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் படையினர் வசமிருந்த 90 வீதமான நிலங்கள் மீள ஒப்படைக்கப்பட்டு விட்டன என என்னால் உறுதி செய்யமுடியுமென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மூலோபாய அடிப்படையில் முக்கியமான காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கப்போவதில்லை.

இராணுவத்தினர் வசமிருந்த 90 வீதமான நிலங்கள் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை கொண்டவர்கள் உள்ளவரை பாதுகாப்பு அடிப்படையில் முக்கியமான பகுதிகளை மீள ஒப்படைக்கப்போவதில்லை.

எங்கிருந்தோ வந்த பௌத்த மதகுரு ஒருவர் தொல்லியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என தெரிவித்து விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதை தடுத்துள்ளார் என விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பௌத்த மதகுருமார்கள் படையெடுப்பார்களோ ஆக்கிரமிப்பாளர்களோ இல்லை. அவர்கள் இந்த சமூகத்தின் ஒரு பகுதி, அவர்களுக்கு பௌத்த சிங்கள பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான உரிமையுண்டு.

விக்னேஸ்வரன் பலாலியில் விமானங்கள் இறங்கும் ஓடுபாதையையே கோருகின்றார் என நான் கருதுகின்றேன்.

இந்த பகுதிகள் மூலோபாய ரீதியில் முக்கியமானவை. விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்கள் உள்ளவரை அவற்றை மீள வழங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.