யாழில் இராணுவ நிர்வாகம்?: வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழில் இராணுவ நிர்வாகம்?: வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை!


தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கு தடைவிதித்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாவகச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஏ9 வீதியில் இராணுவக்கெடுபிடி அதிகரித்துள்ளது.

வடக்கில் இராணுவ ஆட்சி நிர்வாகம் நடக்கிறதோ என எண்ணத் தோன்றும் விதமாக யாழ்ப்பாணத்திலிருந்த சாவகச்சேரி செல்லும் வழியில், செம்மணியிலிருந்து இராணுவம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

செம்மணியிலிருந்து சாவகச்சேரி வரையில் பல இடங்களில் வீதியில் இராணுவம் நிறுத்தப்பட்டு, வீதியில் பயணிக்கும் அனைவரும் வழிமறிக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பயண விபரம் இராணுவத்தினரால் துருவிதுருவி விசாரிக்கப்படுகிறது.

இதேவேளை, சாவகச்சேரி சிவன் ஆலய வளாகம் இராணுவத்தினரின் முழுமையான முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழையும் அனைவரும் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்