இலங்கையில் தலைமறைவாகிய சாராவை கைது செய்ய கோரிக்கை - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இலங்கையில் தலைமறைவாகிய சாராவை கைது செய்ய கோரிக்கை


ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புகூறும் உண்மையான குற்றவாளிகளை கண்டுகொள்வதற்காக நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ள சாரா என்கிற புலஸ்தினி என்ற பெண்ணை கைது செய்து அழைத்து வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துகிற ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் நேற்று மாலை ஆஜராகி சாட்சியமளித்தபோது இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் சாட்சியமளிக்கையில், இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு தற்கொலைத் தாக்குதல் நடத்துகிற அளவுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்களும் அல்ல என்று கூறினார்