கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை முன்னரங்காக இருந்த பகுதியில் உடல் எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள், சயனைட் குப்பிகள், இலக்கத் தகடுகள் உட்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மே மாதத்துக்கு முன்னதாக கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட நிலையில் பல கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் (22) மீளவும் அகழ்வு பணி இடம்பெற்றிருந்த நிலையில் அகழ்வின்போது மண்டையோட்டு எச்சங்கள், எலும்பு எச்சங்கள், புலிகளின் சீருடை, சோதியா படையணியினுடையது என்று நம்பப்படும் த.வி.பு ஞா-188, த.வி.பு ஞா-308 இலக்கத் தகடுகள், புலிகளின் தலைவரது படம், சயினைட் குப்பி, கைக்குண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய தினமும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments
Note: Only a member of this blog may post a comment.