Breaking News



பிரேசில் நாட்டில் இளம் ஜோடி ஒன்று வாழ்ந்து வந்த வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தவர்கள் கேட்டபோது, தன் நாய்க்குட்டிஇறந்துவிட்டதாக கூறியிருக்கிறான் அந்த வீட்டு இளைஞன். ஆனால், அவர்கள் பொலிசாரிடம் புகாரளித்துவிட்டார்கள்.
பொலிசார் வந்து பார்க்கும்போது, அந்த வீட்டில் தன் காதலன் Paulo Eduardo dos Santos(18) உடன் வாழ்ந்து வந்த Jheniffer Caceres de Oliveira (17) என்ற இளம்பெண் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணைக் கொலை செய்த Paulo, அந்த உடலுடனேயே தூங்கியிருக்கிறான். அவள் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டதால், உடல் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், தன் நாய்க்குட்டி இறந்துவிட்டதாகவும், அதை புதைக்க இடமில்லாததால், அது நாற்றம் அடித்துக்கொண்டு கிடப்பதாகவும் கூறியிருக்கிறான் Paulo.

அக்கம்பக்கத்தில் வசிப்போர், Pauloவும் Jhenifferம் இரவு விடுதிக்கு சென்றிருந்தபோது, Jheniffer வேறொரு ஆணுடன் நடனமாடுவதைக் கண்ட Paulo அவளுடன் சண்டையிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
அன்று இரவே, Paulo, Jhenifferஐக் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். கொலை செய்த உடலை தங்கல் படுக்கையில் வைத்துக்கொண்டே, எதுவும் தெரியாததுபோல சகஜமாக அவன் நடமாட, உடல் அழுகியதால் ஏற்பட்ட நாற்றம் விஷயத்தை வெளியே கொண்டு வந்து விட்டது.

விசாரணையின்போது, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு Jheniffer தன்னை துடைப்பத்தால் அடிக்கவந்ததாகவும், கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளான் Paulo.
தற்காப்புக்காகத்தான் தான் Jhenifferஐக் கொன்றதாகவும் கதையை மாற்றிவிட்டான் Paulo. பொலிசார் Pauloவைக் கைது செய்துள்ளார்கள்.

அவன் மீது Jhenifferஐக் கொலை செய்ததாகவும், அவளது உடலை மறைத்துவைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இம்மாதம் (செப்டம்பர்) 24ஆம் திகதி Paulo மீதான விசாரணை துவங்க உள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.