Breaking News



இலங்கை வரலாற்றில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் என குற்றம்சாட்டி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இளைஞர்கள் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது.

இந்த வழக்கு நீதிவான் சீலானி பெரேரா முன் விசாரணைக்கு வரும்.
கோட்டை பொலிசாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட குறித்த இளைஞர்கள் இருவரும் தம்மை ஓரினச்சேர்க்கையாளர்கள் என ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் தலா 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.