Breaking News



வடக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட மாகாணத்தின் புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மத்தியஸ்தர்கள் ஏற்கனவே ஆர்.சம்பந்தன், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருப்பினும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த கூட்டணியில் சேர மறுத்துவிட்டார் என குறிப்பிடப்படுகின்றது.

மற்ற கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைப்பின் உறுப்பினர்கள் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.