சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு நீண்ட நாட்களாகியும் விடுமுறை வழங்கப்படவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.இதனால் மன விரக்தி அடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிகளவான பெனடோல் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.