Breaking News


கண்டியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம், மாணவி ஆடிய நாடகம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) 12 வயது மாணவி ஒருவர் காணாமல் போனதை தொடர்ந்து, பொலிசாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது. பின்னர் 3 மணித்தியாலங்களின் பின்னர், அவர் கல்வி கற்கும் பாடசாலைக்கு அருகில் இறக்கி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், இது மாணவி ஆடிய நாடகம் என தெரிய வந்தது.

மாணவி தனது ஸ்மார்ட் போனில் திகில் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருவதாகவும், அப்படியான காட்சியொன்றை போல தன்னை கடத்தியதாக நாடகம் ஆடியுள்ளார்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இது வெளிச்சத்திற்கு வந்தது.

தனது ‘ஸ்மார்ட் போனில்’ திகில் காட்சிகளைப் பார்த்த அந்தப் சிறுமி, போலி நாடகத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறுமியின் பெற்றோருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.