Breaking News



சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை (DNA) மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஐ.என்.றிஸ்வான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த கால விசாரணைகளின் போது, சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமையை மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து புலஸ்தினியின் தாயாரை இன்று கொழும்பு அரச பாகுப்பாய்வு பிரிவிற்கு அழைத்துச் சென்று அவரின் மரபணுவினை பெற்று அதனை சாராவின் மரபணுவுடன் ஒத்துப்போகின்றதா என்பதை பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதேவேளை இவர் தற்கொலை தாக்குதலில் மரணிக்கவில்லை என்றும், தப்பி இந்தியாவுக்குசென்று விட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Note: Only a member of this blog may post a comment.