Breaking News




தமிழ் மக்கள் நிம்மதியோடும் சுயநிர்ணய உரிமையோடும் வாழ்வதற்கு ஆறுமுகம் தொண்டமான் பூரண ஒத்துழைப்பு வழங்கினாரென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே 2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவரை நேரில் சந்தித்து அவருடன் உணவு உண்டாரென அவர் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டமான் அனுதாப பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மறைந்த ஆறுமுகம் தொண்டமான் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என பெருமளவில் புனைந்து பேசப்படுகிறது.

ஒருபோதும் மலையக மக்களோ – தலைவர்களோ ஈழ விடுதலையில் எதிர்க்கருத்தை கொண்டிருக்கவில்லை.

எத்தனையோ மலையக இளைஞர்கள் ஈழத்து மண்ணில் மாவீரர்களாக மடிந்துள்ளனர்.

ஆறுமுகம் தொண்டமான், தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.