சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் சமகாலம் வரை விலையானது நூற்றுக்கு 23 வீதம் வரை அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 1925 அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தங்கத்தினை கொள்வனவு செய்ய காத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.