இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்ட தாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி பொலன்ன றுவையில் உள்ள மாவட்ட வைத்தியசாலையிலிருந்து இரத்மலானை விமானப் படை தளத்திற்குச் சொந்தமான 412 பெல் என்ற உலங்கு வானூர்தி ஊடாக மனித உறுப்பு கள் கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு வெற் றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.